வாவ்.. சென்னையில் இடியுடன் பெய்கிறது மழை.. அப்படியே குறைந்த செல்சியஸ்.. வேறு எங்கெங்கு மழை தெரியுமா?

சென்னை:
கோடை வெயில் மக்களை கதற வைத்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிககளில் இன்று இடங்களில் இடியுடன் கூடிய
மழை
பெய்து வருகிறது.

சித்தராமையா கர்நாடகா காங்கிரஸின் கதாநாயகன் ஆனது எப்படி?

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியா முழுவதுமே இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிக அளவில் இருக்கிறது. சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் சில மாதங்களுக்கு முன்பே இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

பருவநிலை மாறுபாடு தீவிரமடைவதால், வருகிற கோடைக்காலத்தில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடுமையான வெப்பம் இருக்கும் என அவர்கள் கூறியிருந்தனர். அதுபோலவே, தற்போது நம் நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது..

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, வேலூர், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பாலைவனம் போல வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. காலை 9 மணிக்கு கூட வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலையில்தான் மக்கள் இருந்தனர். பல இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி கொளுத்தி வந்தது.

இந்நிலையில்தான், இந்த வெயிலுக்கு இதமாக தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதியம் 2.30 மணிவரை எப்போதும் போல வழக்கமான வெயிலே காணப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், வெப்பக்காற்று மிக அதிகமாகவே வீசி வந்தது. ஆனால், மதியம் 3 மணிவாக்கில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. திடீரென சென்னையில் கருமேகங்கள் சூழ தொடங்கின. அனல் காற்றும் அப்படியே குளிராக மாறியது. இதையடுத்து, இடி சத்தம் காதை பிளக்க சில்லென மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல, சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வண்டலூர், தாம்பரம், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் அனலாக தகித்துக் கொண்ட சென்னை அப்படியே குளிரத் தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக மழையை பார்த்திராத சென்னைவாசிகள், இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்றி ஆகியவற்றின் காரணமாக சென்னையில் மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் சென்னையில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, தரம்புரி, வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.