'சாகுந்தலம்' படத்திற்கு தேவ்மோகன் வாங்கிய சம்பளம்.. மொக்க படத்திற்கு கோடியில் சம்பளமா?

சென்னை : சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்த தேவ்மோகன் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

புராணக்கதையான சாகுந்தலம் கதையைக்கொண்டு தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சாகுந்தலம்.

இந்த காவியத்தில் வரும் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாயாகவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.

சமந்தா : அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் ம்ம்ம் சொல்லி ஆட்டம் போட்ட சமந்தாவின் மார்க்கெட் வேகத்தில் சென்றது. அதன்பின் இவர் நடித்த யாசோதா திரைப்படத்திற்கும் கணிசமான வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து வெற்றியில் திளைத்த சமந்தா இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் உருவான சாகுந்தலம் படத்தில் நடித்திருந்தார்.

மோசமான விமர்சனம் : இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் புத்தாண்டு அன்று பான் இந்திய திரைப்படமாக வெளியானத் இத்திரைப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி கார்ட்டூன் பார்ப்பது போல இருக்கு என்று விமர்சித்தனர்.

Malayalam actor Dev mohan salary for shaakuntalam movie

20 கோடி நஷ்டம் : 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலம் படம் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பாளர் மட்டுமல்ல திரையரங்கு விநியோகஸ்தர்களும் சாகுந்தலம் திரைப்படத்தின் மோசமான தோல்வியால் தலையில் துண்டு போட்டுள்ளனர். இவர்கள் மட்டுமில்லாமல் சமந்தாவும் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

தேவ் மோகனின் சம்பளம் : இந்நிலையில், இப்படத்தில் துஷ்யந்தனாக கதாபாத்திரத்தில் நடித்த தேவ் மோகனுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மலையாள நடிகரான தேவ் மோகனுக்கு ரூ.1.75 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள், நடிகர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கு பதில், செலவு செய்து கிளாபிக்ஸில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.