இந்திய – அமெரிக்க விமானப்படை பயிற்சி| Indo-US Air Force exercise

கலைகுண்டா,மேற்கு வங்க மாநிலம், பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமானப்படை நிலையத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் விமானப் படைகளின் போர் விமானங்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

இந்தியா – அமெரிக்க விமானப் படைகளின் ஐந்து ோர் விமானங்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. நம் விமானப் படை சார்பில் தேஜாஸ், ரபேல், ஜாகுவார் மற்றும் சு-.30 எம்.கே.ஐ., போர் விமானங்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

அதே போல், அமெரிக்க விமானப் படை சார்பில், எப் -15 ரக விமானங்கள் பங்கேற்றன. கடந்த 10ல் துவங்கிய இந்த கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு அடைந்தது.

கூட்டுப் பயிற்சியில் பங்கேற்ற, அமெரிக்க விமானப் படையின் கமாண்டிங் அதிகாரி பெண்டர் கிபோர்ட் கூறியதாவது:

இந்திய விமானப் படை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற சிறந்த வாய்ப்பு கிடைத்தது. இரு நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையிலான மிகப்பெரிய கூட்டு விமானப் பயிற்சி இது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.