
கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்?
நடிகர் கிச்சா சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும் நான் ஈ படத்தின் மூலம் இவர் இந்திய முழுவதும் கவனம் பெரும் நடிகராக மாறியுள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த விக்ரந்த் ரோனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரனிடம் கிச்சா சுதீப் கதை கேட்டு பிடித்துள்ளதால் விரைவில் இந்த படத்தை தொடங்கலாம் என கூறியுள்ளாராம் சுதீப். சேரனும் இப்போது ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார். அதை முடித்த பின் இவர்கள் இணைவார்கள் என தெரிகிறது. இதற்கு முன்பு சேரனின் ஆட்டோகிராப் படத்தை கன்னட ரீமேக்கில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.