`போக்கிரி',`சந்திரமுகி' எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள் – நடிகை மைத்ரேயி நெகிழ்ச்சி!

2020-ல் Netflix-ல் வெளியான ‘Never Have I Ever’ வெப்சீரீஸ் மூலம் அறிமுகி பிரபலமானவர் தமிழ்-கன்னடிய நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன். இவரது பெற்றோர்கள் போர் சூழலில் இலங்கையிலிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.

இந்திய-அமெரிக்க டீனேஜ் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த ‘Never Have I Ever’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் அடுத்தடுத்த சீசன் வெளியாகி நான்காவது சீசன் ‘Netflix’ -ல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக ‘தேவி விஸ்வகுமார்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மைத்ரேயி ராமகிருஷ்ணன். இவரது கதாபாத்திரமும், நடிப்பும் நல்ல விமர்சனங்களைப் பெற்று மைத்ரேயி, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக வளம் வரத் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மைத்ரேயி, தான் தமிழ் படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், ‘போக்கிரி’, ‘சந்திரமுகி’ தனக்குப் பிடித்த தமிழ்த் திரைப்படங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், சந்திரமுகியில் நடிகை ஜோதிகாவின் கதாப்பாத்திரமும், நடிப்பும் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஜோதிகாவின் படங்களும், நடிப்பு தனக்குப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.