ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த சில வருடங்களாக விஜய் அரசியலில் இறங்குவாரா இல்லையா என்ற கேள்வி தான் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அவ்வப்போது படங்களில் பேசும் வசனங்களிலும், இசை வெளியீட்டு விழா பேச்சிலும் தனக்கு அரசியல் ஆசை இருக்கு என்பதை தளபதி உணர்த்தியுள்ளார்.
மேலும் அவரது மக்கள் இயக்க மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றவும் முயற்சித்து வருகின்றார் தளபதி. இதையெல்லாம் விஜய் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் அவரின் செயலை வைத்து மற்றவர்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. எனவே விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவுள்ளதை அடுத்து அவர் எப்போது வருவார் என்ற கேள்வி தான் தற்போது இருந்து வருகின்றது.
Leo: திடீரென நிறுத்தப்பட்ட லியோ படப்பிடிப்பு..காரணம் என்ன தெரியுமா ?
இந்நிலையில் சமீபத்தில் விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். கிட்டத்தட்ட 1500 மாணவர்களுக்கு விஜய் தன் கையால் ஊக்கத்தொகை வழங்கினார். ஊக்கத்தொகை வழங்கியது மட்டுமல்லாமல் ஒரு நாள் முழுக்க மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டார் தளபதி.
விஜய் வசந்த்
இதையடுத்து விஜய்யின் இந்த செயலை மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றி பல அரசியல் தலைவர்களிடம் கருத்தும் கேட்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரும் தற்போது எம்.பியாக செயல்பட்டு வரும் விஜய் வசந்த்திடமும் விஜய்யின் இந்த செயலை பற்றியும், அவரின் அரசியல் பயணத்தை பற்றியும் கேட்கப்பட்டது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதற்கு பதிலளித்த விஜய் வசந்த், விஜய்யின் இந்த செயலை பாராட்டியதோடு அவர் எங்கள் கூட்டணியில் இணைந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறியுள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு பலர் வருகை தந்துள்ளனர். எனவே விஜய்யும் அரசியலுக்கு வந்தால், அவர் எங்கள் கூட்டணியில் இணையவேண்டும் என நினைத்தால் நாங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம் என தன் ஆசையை கூறியுள்ளார் விஜய் வசந்த். இதைப்போல பலர் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.