விஷம் கொடுத்து கொல்ல சதி: பிரபல வில்லன் நடிகர் பரபரப்பு புகார்.!

தமிழ் சினிமாவில் வில்லனாக ஒரு சில படங்களில் நடித்தவர் ஜே.டி. சக்கரவர்த்தி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை விஷம் கொடுத்து கொல்ல பார்த்ததாக தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டாள், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஜே.டி. சக்கரவர்த்தி. இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதில், எனக்கு சில மாதங்களுக்கு முன்பாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு சிகரெட், மது, போதைப்பொருள் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனாலும் மூச்சு விடவே கஷ்டப்பட்டேன். இதற்காக நிறைய பேரிடம் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

Lal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வளவு கருத்து போயிட்டாரே: எல்லாம் இதுக்காக தான்.!

ஒருக்கட்டத்தில் உடல்நிலை மோசமாகி விட்டது. இனிமேல் பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அப்போது நாகார்ஜுனா என்ற டாக்டர் ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு வேண்டிய ஒருவர் எட்டு மாதங்களாக எனக்கு கசாயம் ஒன்று கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்திருப்பதை அந்த டாக்டர் கண்டுபிடித்தார் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Leo: விஜய்யுடன் சரியான ஆளை மோத விட்டிருக்கும் லோகேஷ்: அதை நினைச்சா தான் பயமா இருக்கு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.