பெர்லின் சிறப்பு ஒலிம்பிக்ஸில் சாதிக்கும் இந்திய இளைஞர்கள்! இதுவரை 76 பதக்கங்கள்

பெர்லின்: 2023 சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதுவரை இந்தியா 76 பதக்கங்களை பெற்றுள்ளது. பெர்லினில் கடந்த புதன்கிழமையன்று (2023, ஜூன் 21) இந்தியாவுக்கு 15 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் 55 பதக்கங்கள் கிடைத்தன.

கடந்த 2 நாட்களில், இதுவரை இந்தியாவின் சிறப்பு விளையாட்டு வீரர்களின் பதக்க எண்ணிக்கை 76ஆக உயர்ந்துவிட்டது. 26 தங்கம், 30 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களுடன் 76 பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். 

Heading into the last 2 days, here is the Medal Count of our Special Athletes so far! 76 medals secured, with 26 Gold, 30 Silver and 20 Bronze Medals! An absolutely amazing performance by our athletes! Let’s cheer for the athletes for them and become #UnbeatableTogether pic.twitter.com/Lq6WhwjgwL

— Special Olympics Bharat (@SOlympicsBharat) June 23, 2023

சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுகள் என்றால் என்ன?
ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பற்றி. ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும், இது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களிடையே புரிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் வாழ்க்கையை மாற்றுகிறது. உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும், விளையாட்டுகளின் மூலம் மனநிலையை மாற்றுவது மிகவும் அற்புதமான ஒன்று.

சிறப்பு ஒலிம்பிக்கில் எத்தனை விளையாட்டுகள் உள்ளன?
சிறப்பு ஒலிம்பிக்கில், முப்பதுக்கும் மேற்பட்ட தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்குகிறது. தற்போது பெர்லினில் நடைபெற்றுவரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக உள்ளது. 

ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் நீச்சல் என ஐந்து வெவ்வேறு விளையாட்டுகளில் இந்த பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்றுள்ளனர். உலக விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிள் ஓட்டும் போட்டி பிராண்டன்பேர்க் கேட் அருகே நடைபெற்றது. இந்தியாவின் சைக்கிள் ஓட்டும் குழு உறுப்பினர்கள் அனைவரும் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

5 கிமீ சாலைப் பந்தயத்தில் நீல் யாதவ் வெண்கலம் வென்றார். யாதவின் பதக்கம், குழுவிற்கு நம்பிக்கையை அளித்தது, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெற்ற போட்டிகளில் ஷிவானி, நீல் யாதவ் மற்றும் இந்து பிரகாஷ் ஆகியோர் 1 கிமீ டைம் ட்ரையல் போட்டியில் தங்கமும், கல்பனா ஜெனா மற்றும் ஜெயசீலா அற்புதராஜ் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

நீச்சல் போட்டிகளில், ஃப்ரீஸ்டைல் நீச்சல் வீராங்கனைகளான திக்ஷா ஜிதேந்திர ஷிர்கோன்கர், பூஜா கிரிதர்ராவ் கைகாவாடா மற்றும் பிரஷாதி காம்ப்ளே ஆகியோர் தங்கம் வென்றனர். மாதவ் மதன், 25 மீ ஃப்ரீஸ்டைல் போட்டியில் தங்கம் வென்றார். முரளி மற்றும் சித்தான்த் குமார் 25 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலம் வென்றார்.

சோனேபட் இளைஞன் சாகேத் குண்டு, மினி ஈட்டி லெவல் B (Mini Javelin Level B) பிரிவில் வெள்ளி வென்றார், தேசிய அளவில் டேபிள் டென்னிஸ், ஃபிகர் ஸ்கேட்டிங் மற்றும் தடகளத்தில் போட்டியிட்ட லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவர் சாகேத் குண்டு, பல்வேறு விளையாட்டுகளை விளையாடக்கூடிய சிறப்பான விளையாட்டு வீரர் ஆவார்.

2023 ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் உலக குளிர்கால விளையாட்டுகளில் அவர் கலந்துக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார், ஆனால், அந்த விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை சாகேத் குண்டு இழந்தார். தற்போது அவர், தடகளப் போட்டிகளில் பங்கேற்கிறார்.

பெர்லினில் நடந்த உலக விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகமான மினி ஜாவெலின் போட்டியில் இந்தியா முதல் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பதக்க வேட்டை தொடரும் என்பதால், அனைவரும் 2023 சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.