புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பிரம்மபுரி பகுதியை சேர்ந்தவர் பூலான் தேவி. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் ஒருவர் பின்தொடர்ந்தார். அவர் தேவி அணிந்திருந்த ½ பவுன் தங்க கம்மலை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.
இதனால் தேவி கூச்சலிட்டு அலறினார். அப்போது அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடனை கையும் களவுமாக பிடித்தனர். அந்த நேரத்தில் தான் திருடிய தங்க கம்மலை வாயில் போட்டு திருடன் விழுங்கினான். இதுகுறிந்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நகைப்பறிப்பில் ஈடுபட்டவரை கைது செய்தனர். அவர் விழுங்கிய தங்க கம்மலை எடுக்க ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
Related Tags :