காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் மரங்களின் பயனால் இவ்வருட பழ அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவரீதியாக (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளர் ரிப்கா சபீன் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்தார்.
இதன் போது இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் நகர சபை செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.