எல்லாரும் ஓரம் போங்க இனிமே என் ஆட்டம் தான்.. லஸ்ட் ஸ்டோரீஸ் நடிகையின் கவர்ச்சி அட்ராசிட்டி!

சென்னை: சீதாராமம் திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் இணையத்தில் அதிரிபுதிரியான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர்.

இவர் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சீதா ராமம்: ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு நடித்திருந்தார். பீல் குட் லவ் ஸ்டோரியை நீண்ட நாட்களுக்கு பின் திரையில் பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போனார்கள். அந்த அளவுக்கு துல்கர் சல்மானின் நடிப்பும், மிரணாள் தாகூரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

lust stories 2 actress mrunal thakur stunning pics trending on social media

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: இந்த படத்தை தொடர்ந்து பாகம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ ஆந்தாலஜி தொடரில் விவகாரமாக நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த வாரம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்தில், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பால்கி, கொங்கோனா சென் இணைந்து நான்கு வித்தியாசமான கதையை கொடுத்துள்ளனர்.

செக்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்: இந்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் சீரிஸாக ‘Made For Each Other’ இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது குறித்து பேசுகிறது. அண்மையில் அவர் அளித்த பேட்டியில், தற்போதைய சூழலில் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம், இதனை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றார்.

lust stories 2 actress mrunal thakur stunning pics trending on social media

கவர்ச்சி அட்ராசிட்டி: லஸ்ட் ஸ்டோரீஸில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்ட மிருணாள் தாகூருக்கு கண்டனம் குவித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருப்பு உடையில் என்னைப்பார் என் அழகைப்பார் என்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த போதும், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்றும் சிலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.