ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200  நிலநடுக்கங்கள் – காரணம் என்ன? 

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு ஆய்வு மையம் தரப்பில், “ரெய்க்யவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளாக கருதப்படுகின்றன. இதில் பல நில நடுக்கங்கள் மிதமான ( ரிக்டர் அளவில் 4.1 ) அளவில் பதிவாகியுள்ளன“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஐஸ்லாந்துதான் எரிமலைகள் செயல்பாட்டில் உள்ள பகுதியாக உள்ளது. மேலும் ஐஸ்லாந்து வடக்கு அட்லாண்டிக் தீவு, மத்திய அட்லாண்டிக் ரிட்ஜ் , ஐ யூரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகளை பிரிக்கிறது. இதன் காரணமாக ஐஸ்லாந்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் நிச்சயம் அச்சத்தை தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜஃப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடிப்பு காரணமாக 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் சிக்கித் தவித்தனர். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரெய்க்யவிக்கில் ஏற்பட்ட நில நடுக்கங்கள் நிச்சயம் கண்காணிக்கப்பட வேண்டியை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.