மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – வடிவேலு கூட்டணி ?இம்முறை ரீமேக் படமாம்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற தன் முதல் படத்தின் மூலமே மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் உண்டாக்கினார். அதன் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னிலை இயக்குனராக முன்னேறினார் மாரி செல்வராஜ்.

இரு படங்களும் வெற்றி படங்கள் என்பதாலும் குறிப்பாக ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் இவரின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் தெரிவித்தனர். அதில் ஒருவர் தான்
உதயநிதி
. தன் கடைசி திரைப்படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்கவேண்டும் என அடம்பிடித்து அவரை புக் செய்தார் உதயநிதி. எனவே தான் மாமன்னன் திரைப்படம் உருவானது.

மாமன்னனாக வடிவேலு

சமீபத்தில் இப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்து இருக்கும் மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Maamannan: வருங்கால முதல்வரான உதயநிதியின் நடிப்பு..பாராட்டி தள்ளி பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்..!

குறிப்பாக இப்படத்தில் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரமும் நடிப்பும் வெகுவாக ஈர்த்துள்ளது. இதுவரை வடிவேலுவை நகைச்சுவை நடிகராகவே ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் மாமன்னன் படத்தில் வித்யாசமான வைகைபுயலை ரசிகர்களுக்கு காண்பித்தார் மாரி செல்வராஜ். படத்தை பார்த்த அனைவருமே வடிவேலுவின் நடிப்பை பாராட்டி வரும் நிலையில் மாமன்னன் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு.

மீண்டும் இணையும் கூட்டணி

இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் வடிவேலு மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அதாவது LIFE IS BEAUTIFUL என்ற இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறாராம் மாரி செல்வராஜ்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதனை வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படம் வடிவேலுவுக்கும் மிகவும் பிடித்த படம் என்றும், அப்படத்தை மாரி செல்வராஜ் வடிவேலுவை வைத்து தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் வடிவேலு. இந்த தகவல் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் நாம் மீண்டும் வித்யாசமான கோணத்தில் வைகைபுயலை பார்க்கலாம் என்பதில் எந்த சதேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.