ஸ்ரீநகர் : தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்த 14 பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீரில் கடந்த ஜூன் 25 ம் தேதி கவர்னர் மனோஜ் சின்ஹா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்தவாறே தங்களது பணிகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 14 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களை எழுந்த நிற்க செய்யாத சில போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement