சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தையை போலவே பன்முகத்திறமையுடன் இந்திய அளவில் சிறப்பான நடிகையாக செயல்பட்டு வருகிறார்.
நடிகையாக மட்டுமில்லாமல், பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என இவர் அடுத்தடுத்த தளங்களில் சிறப்பாக பயணித்து வருகிறார்.
அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வரும் ஸ்ருதிஹாசன், தற்போது சாந்தனு என்பவருடன் காதல் வசப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது அதிரடியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஸ்ருதிஹாசனை செல்லப்பெயர் வைத்து கூப்பிடும் கமல்ஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருப்பவர். சமீபத்தில் தெலுங்கில் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன், ஒரே நேரத்தில் வெளியான இந்தப் படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததில், ஸ்ருதிஹாசன் ஹாப்பி அண்ணாச்சி. தற்போது பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வௌயாகும் நிலையில் படம்குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழில் தன்னுடைய அறிமுகப்படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் 7ம் அறிவு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் ஸ்ருதி. தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இடையில் சிறிது காலம் இவர் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில், தற்போது தனது ரீ-என்ட்ரியை சிறப்பாக செய்து வருகிறார். பாலிவுட்டிலும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்ருதிஹாசன்.
இவரது அடுத்தடுத்த வீடியோக்கள், படங்கள் குறித்த அறிவிப்பு, புகைப்படங்கள் அதிரடியாக இன்ஸ்டாகிராமில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் தான் முத்தம் கொடுக்கும் வீடியோக்கள், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்புவார் ஸ்ருதி. மேலும் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக மிகவும் போல்டாக பேசுவதிலும் இவர் சிறப்பாக காணப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ஸ்ருதிஹாசன், பல ருசிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ரசிகர் ஒருவ்ர், அவரது அப்பா அவரை எப்படி அழைப்பார் என்ற கேள்வியை கேட்டிருந்தார். இது என்னடா கேள்வி, ஸ்ருதி என்றுதானே அழைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த கேள்விக்கும் ருசிகரமான பதில் ஸ்ருதியிடம் இருந்தது.
நடிகர் கமல்ஹாசன், ஸ்ருதியை எப்போதும் சடகோபா என்றுதான் அழைப்பாராம். இந்த பதிலை தன்னுடைய ரசிகரிடம் பகிர்ந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், இதற்கான காரணத்தை நீங்கள், அப்பாவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என்றாகிவிட்டது அந்த ரசிகரின் நிலை. இத்தனை ஆண்டுகாலங்களாக தன்னுடைய தந்தை, தன்னை ஒரு வித்தியாசமான பேரை சொல்லி கூப்பிடும்போது, அதற்கான காரணத்தைக்கூடவா ஸ்ருதி கேட்டிருக்க மாட்டார் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.