கடந்த வாரம் வெளியான ‘மாமன்னன்’ படம் தமிழ் சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல் திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் படம் நனைந்து வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
வடிவேலு டைட்டில் ரோலில் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் உதயநிதியின் கடைசி படமாக அமைந்துள்ளது. தன்னுடைய கடைசி படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்ற ஆசையில் அவரை அழைத்து கதைக்கேட்டு இந்தப்படத்தில் நடித்துள்ளார்
உதயநிதி ஸ்டாலின்
. அவரின் ஆசைப்படியே ‘மாமன்னன்’ படம் உதயநிதியின் சினிமா கெரியரில் பெஸ்ட்டான ஒன்றாக அமைந்துள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக நீதி பேசும் படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக ‘மாமன்னன்’ வெளியாகியுள்ளது. அவருடைய முந்தைய படங்களை போலவே இதிலும் அழுத்தமான திரைக்கதையில் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பதிவு செய்துள்ளார் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனான வடிவேலுவை முற்றிலும் வேறு ஒரு பரிணாமத்தில் இந்தப்படத்தில் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். அவரும் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் பகத் பாசிலின் மிரட்டலான நடிப்பும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.
Salaar: ‘கேஜிஎஃப்’ மூன்றாம் பாகமா..?: ‘சலார்’ டீசரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா.!
ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வரும் ‘மாமன்னன்’ படம் உதயநிதி கெரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பினை தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக இயக்குனர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப்படம் ஏழு நாட்களில் ரூ.40 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் 50 கோடி வசூலை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் வேறு வருவதால் ‘மாமன்னன்’ படம் மேலும் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maamannan:வடிவேலுக்கு தேசிய விருது கொடுக்கணும்: மாமன்னனை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்.!