
ஜவான் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் பிரபல நிறுவனம்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் ஜவான். நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பிஸ்னஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, அட்லீ இயக்கியுள்ளதால் தமிழில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.