சென்னை: நடிகை ரேவதி 40 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர். தொடர்ந்து இவரை சினிமாவில் பார்க்க முடிகிறது.
சிறந்த இயக்குநராகவும் தன்னை நிரூபித்தபவர் ரேவதி. இவரது இயக்கத்தில் வெளியான Mitr, my friend படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது.
தான் ஏற்கும் கேரக்டர்களை சிறப்பாக்கும் கலை ரேவதிக்கு எப்போதுமே உண்டு. ஆனால் இவர் சொந்த வாழ்க்கை பிரச்சினைகளை சந்தித்தது.
பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரேவதி: நடிகை ரேவதி தொடர்ந்து 40 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரேவதி, தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் மண்வாசனை என்ற படத்தில் தனது சினிமா பயணத்தை துவக்கினார். இவரது இயற்பெயர் ஆஷா. ஆனால் சினிமாவிற்காக இவரது பெயரை ரேவதி என மாற்றினார் பாரதிராஜா.
சினிமாவில் ஆர்வம் இல்லாமல்தான் நடிக்க வந்துள்ளார் ரேவதி. தொடர்ந்து படப்பிடிப்பில் நடைபெறும் சுவாரஸ்மான சம்பவங்கள் இவரை சினிமாமீது காதல் கொள்ள வைத்துள்ளது. மேலும் இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தை பார்த்த இவருக்கு இயக்குநராகும் ஆசையும் வந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய முதல் படமான Mitr, my friend படத்தை கடந்த 2002ம் ஆண்டில் வெளியிட்டார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் படம் 3 விருதுகளையும் அளளியது.
இந்தப் படத்தை இயக்கியதற்காக ரேவதிக்கும் விருது கிடைத்தது. இதுபோல மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளார் ரேவதி. அதில் தேவர்மகன் படத்தின் நாயகியாக நடித்து பெற்றது ஒன்று. Mitr, my friend படத்தை தொடர்ந்து பிர் மிலேங்கே, கேரளா கேஃப், மும்பை கட்டிங் போன்ற படங்களும் ரேவதி இயக்கத்தில் வெளியானது. நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருகிறார் ரேவதி.

ரஜினி, கமல், கார்த்தி, மோகன், பிரபு என 80களின் முன்னணி ஹீரேக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த ரேவதி, கடந்த 1986ம் ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆதர்ச தம்பதிகளாக வலம்வந்த இவர்களுக்கு குழந்தை இன்மை மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
ஆனாலும் தன்னுடைய குழந்தைக்கான ஏக்கம் மட்டும் ரேவதிக்கு குறையவில்லை. தொடர்ந்து தன்னுடைய 47வது வயதில் டெஸ்ட் டியூப் மூலம் மஹி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த ரேவதி, அந்தக் குழந்தையை சிறப்பாக வளர்த்து வருகிறார். இவர் இந்தக் குழந்தையை தத்தெடுதது வளர்த்ததாக வெளியான தகவலையும் அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நடிகை ரேவதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.