STR 48: சிம்புவின் STR 48 ஷூட்டிங்… க்ரீன் சிக்னல் கொடுத்த ஐசரி கணேஷ்… கூலான கமல்ஹாசன்!

சென்னை: மாநாடு படத்தின் வெற்றியால் கம்பேக் கொடுத்த சிம்பு, மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து தற்போது தனது 48வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஷூட்டிங் இதுவரை தொடங்காமல் இருந்த நிலையில், தற்போது அதுகுறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

STR 48 படத்தின் ஷூட்டிங் அப்டேட்:சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் மூலம் மீண்டும் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. அதனால் சிம்புவின் STR 48 படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இப்படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகி பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. பத்து தல ஷூட்டிங் முடிந்ததுமே STR 48 படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுக்க தாய்லாந்து சென்றிருந்தார் சிம்பு. அதன்பின்னர் சென்னை திரும்பிய அவர் அப்படியே லண்டன் சென்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறார். அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

ஆனாலும் STR 48 ஷூட்டிங் தொடங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இக்கூட்டணி கன்ஃபார்ம் ஆனதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படம் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் அல்லது கொரோனா குமார் இரண்டில் எதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், ஐசரி கணேஷுக்கு கால்ஷீட் கொடுக்காமல் STR 48 படத்தில் கமிட்டாகிவிட்டதால், இதுகுறித்த பஞ்சாயத்து கமல்ஹாசனிடம் சென்றதாம். இறுதியாக சிம்பு – ஐசரி கணேஷ் இருவரையும் அழைத்து கமல் பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டாராம். இந்தப் பேச்சுவார்த்தையில் இறுதியாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சிம்பு. ஆனால், முதலில் STR 48 ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் எனவும் கமல் கூறியிருந்தாராம்.

 STR 48: Producer Isari Ganesh allowed to continue shooting for Simbus STR 48

கமல்ஹாசனின் இந்த டீலிங்கிற்கு ஓக்கே சொன்ன ஐசரி கணேஷ், STR 48 ஷூட்டிங் தொடங்கலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். இதனால், கமல், இயக்குநர் தேசிங் பெரியசாமி இருவருமே மகிழ்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், விரைவில் லண்டனில் இருந்து சென்னை திரும்பும் சிம்பு, STR 48 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் STR 49 படத்தின் அப்டேட்டை வெளியிடவும் ஐசரி கணேஷ் முடிவு செய்துவிட்டாராம். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் இயக்குநர் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.