
சென்னை: வந்தே பாரத் விரைவு ரயில் எளிதில் அழுக்காவதை தவிர்க்க, வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் 70,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பு வாய்ந்த ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது நாட்டிலேயே அதிக வேகத்தில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.