புதுடில்லி :பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் விட்டு விட்டவர்கள், வருமான வரியை தாக்கல் செய்வதற்கு, 6,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி கடந்த ஜூன் 30ம் தேதி என்றும்; தவறும் பட்சத்தில், ஜூலை 1ம் தேதி முதல், பான் எண் செயலிழந்ததாககருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பான் கார்டை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அபராதத் தொகையாக 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டணம் செலுத்தினாலும், பான் எண் செயலாக்கம் பெற, அதிகபட்சம்
30 நாட்களாகும்.
இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஒரு மாதத்திற்கும் குறைவாகவே கால அவகாசம் உள்ளதால், அபராதம் செலுத்தி பான் எண் செயல்படும் வரை காத்திருந்தால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், அதற்கு தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், தாமதக் கட்டணம் 5,000 ரூபாய், பான் எண் செயலாக்கத்திற்கு அபராதக் கட்டணம் 1,000 ரூபாய் என, மொத்தம் 6,000 ரூபாய் வரை அபராத தொகையாக செலுத்த வேண்டி வரும். மேற்கோள்
மொத்த வருமானம், 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், வருமான வரி தாக்கல் தாமதக் கட்டணம் 1,000 ரூபாய், பான் – ஆதார் இணைப்பிற்கு 1,000 ரூபாய் என, மொத்தம் 2,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்