மூணாறு:கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக கொட்டித் தீர்த்த தென்மேற்று பருவ மழை சற்று குறைந்தது.
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சற்று காலதாமதமாக ஜூன் 8ல் துவங்கியது. ஜூலை ஆரம்பத்தில் மழை வலுவடைந்து கடந்த நான்கு நாட்களாக கொட்டித் தீர்த்தது. நேற்று மழை சற்று குறைந்தது.
ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மட்டும் நேற்று பலத்த மழைக்கான ‘எல்லோ அலர்ட்’ முன்னெச்சரிக்கை விடுத்தது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு எவ்வித முன்னெச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் மலையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று வரை 189 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 6671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தது
இடுக்கி மாவட்டத்தில் நான்கு நாட்களாக தீவிரமடைந்த பருவ மழையின் தாக்கம் நேற்று சற்று குறைந்தது. நேற்று முன்தினம் சராசரி மழை 29.12 மி.மீ. பதிவானது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக இடுக்கி தாலுகாவில் 36.2 மி.மீ. மழை பெய்தது. தேவிகுளம் 31.2, உடும்பன்சோலை 9.2, தொடுபுழா 34.7, பீர்மேடு 34.3 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் ஜூன் 1 முதல் நேற்று வரை சராசரி 909.3 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 463 மி.மீ. மட்டும் பெய்தது. ஜூனில் மட்டும் மழை 73 சதவீதம் குறைவாகும்.
மூணாறில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 40 மி.மீ. மழை பெய்தது. இங்கு நியூ காலனியில் ஜூலை 6 இரவில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. அங்கு வசித்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
துவங்கியது
மாட்டுபட்டி அணையில் பலத்த மழையால் கடந்த நான்கு நாட்களாக முடங்கிய சுற்றுலா படகு சேவை நேற்று மழை குறைந்ததால் மதியம் முதல் மீண்டும் துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement