ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா… தமிழக அரசின் பக்தி பரவசமூட்டும் சூப்பர் திட்டம்!

தமிழகத்தில் அம்மன் கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்று சொல்லலாம். கிராமங்கள் தோறும் அம்மன் கோயில்களும், அம்மன் கோயில் திருவிழாக்களும் மிகவும் பிரபலம். அதேசமயம் முக்கிய நகரங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருவர்.

​ஆடி மாத அம்மன் வழிபாடுஉதாரணமாக சொல்ல வேண்டுமெனில் சமயபுரம் மாரியம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அம்மன் தரிசனத்தை பொறுத்தவரை ஆடி மாதம் தான் மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஆடி வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.​இன்னும் 5 நாட்கள் தான்நாட்டு மக்கள் நலமுடன் இருக்கவும், நோய் நொடியற்ற வாழ்வை பெறவும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டும் எனவும் வேண்டி வழிபடுவர். இது பண்டைய காலந்தொட்டே இருந்து வருகிறது. தற்போது ஆனி மாதம் நடந்து வருகிறது. இன்னும் 5 நாட்களில் ஆடி மாதம் பிறந்து விடும். ஆங்கில தேதி படி பார்த்தால் ஜூலை 17ஆம் தேதி ஆடி ஒன்று வருகிறது.
​தமிழக அரசு அறிமுகம்இந்த தேதியில் சிறப்பான திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது, தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கும் அம்மன் கோயில்களை ஆடி மாதத்தில் தரிசித்து நன்மை பெறும் வகையில் சிறப்பு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் வரும் 17ஆம் தேதி ஆடி மாத அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா திட்டம் தொடங்கப்படுகிறது.
​சுற்றுலா கழகம் ஏற்பாடுஇதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTDC) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) ஆகியவை இணைந்து செய்துள்ளன. ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அம்மன் கோயில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும். ஒருநாள் சுற்றுலாவாக சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களை தரிசிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும்.​ஒருநாள் பக்தி சுற்றுலாகாலை 8.30 மணிக்கு தொடங்கும் சுற்றுலா இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றுவிடும். சென்னையை பொறுத்தவரை எந்தெந்த கோயில்களை தரிசிக்க முடியும் என்ற கேள்வி எழலாம்.
சென்னையில் பிரசித்தி பெற்ற கோயில்கள்அதாவது, பாரிஸ் கார்னரில் உள்ள காளிகாம்பாள் கோயில், ராயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில், திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயில், மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்மாள் கோயில், முண்டக்கண்ணி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் உள்ளிட்டவற்றை தரிசனம் செய்யலாம்.சிறப்பு பூஜைகள் மற்றும் பிரசாதம்மேற்குறிப்பிட்ட கோயில்களில் தரிசிக்க வரும் பக்தர்களை சுற்றுலா கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்று உரிய வசதிகளை செய்து தருவர். அதுமட்டுமின்றி சிறப்பு பூஜைகள் நடத்தவும், பிரசாதம் பெறவும் நடவடிக்கை எடுப்பர். இதற்கான கட்டணம் விவரங்கள் மற்றும் முன்பதிவிற்கு தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் இணையதளம் அல்லது தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.கட்டண விவரங்கள்சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் கட்டுப்படியாகக் கூடிய கட்டணமே வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடி மாத அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா திட்டத்தில் முன்பதிவு செய்வோருக்கு உணவும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.