சென்னை: நடிகர் விஜய் தளபதி 68 படத்தை முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற முழுவதுமாக ரெடியாகி விட்டார் என்றே தெரிகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், வின்டேஜ் லுக்கிற்கு நடிகர் விஜய் மாறியுள்ள போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் சூறைக்காற்றாக சுழன்றடித்து வருகின்றன.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை இல்லாமல் வித்தியாசமாக ப்ளூ சட்டையை அணிந்து கொண்டு தனது விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பை பனையூரில் நடத்தி வருகிறார்.
டிரெண்டிங்கில் விஜய் மக்கள் இயக்கம்: #Thalapathy மற்றும் #VijayMakkalIyakkam இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. பனையூரில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் 234 தொகுதி பொறுப்பாளர்களையும் இன்று சந்தித்து அரசியல் தொடர்பான ஆலோசனையை நடத்த உள்ளார்.

நடிகர் விஜய்யை காண காலையில் இருந்து விஜய் மக்கள் நிர்வாகிகளும், ரசிகர்களும் பொதுமக்களும் காத்துக் கிடந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் அந்த இடத்திற்கு வருகை தந்த நிலையில், அவரது போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ப்ளூ சட்டையில் விஜய்: நடிகர் விஜய் மாண மாணவிகளுக்கு சமீபத்தில் பரிசு கொடுத்த போது வெள்ளை சட்டை அணிந்து வந்திருந்தார். அதற்கு முன்னதாக தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் போதும் வெள்ளை சட்டை அணிந்து வந்திருந்தார்.

ஆனால், இன்றைய நிகழ்ச்சிக்கு அவர் நீல நிற சட்டையை அணிந்து கொண்டு தனது ரசிகர்களுக்கு காட்சியளித்துள்ளார்.
க்யூட் லுக்: லியோ படத்திற்காக நரைத்த நீண்ட தலைமுடி ஹேர்ஸ்டைல் மற்றும் ஷார்ப் லுக்கில் இன்னொரு ஹேர்ஸ்டைல் லுக்குடன் கடந்த சில மாதங்களாக தென்பட்டு வந்த விஜய், தனது அடுத்த படமான தளபதி 68 படத்துக்காக வித்தியாசமான ஹேர்ஸ்டைல் லுக்குடன் கொஞ்சம் வின்டேஜ் விஜய்யை பார்ப்பது போல டோட்டலாக மாறி உள்ளார்.

தளபதி 68 லுக் அப்போ இதுதானா? என ரசிகர்கள் விஜய்யை பார்த்து செம ஹேப்பி ஆகி உள்ளனர். அவரது போட்டோக்களை சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி: லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளிலேயே போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி என்கிற வரிகள் இடம்பெற்ற நிலையில், விஜய் ரசிகர்களும் தற்போது அந்த வார்த்தைகளையே பயன்படுத்தி விஜய்யின் அரசியல் வருகையை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.