பிரம்மப்பூர்: அசாம் மாநிலத்தின் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த ரயில், ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலின் பெட்டி ஒன்றில் புகை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ரயிலை நிறுத்தியதுடன், ரயிலில் இருந்து உடனடியாக இறங்கினர். தண்டவாளத்தில் இருந்த கோணிப்பை ஒன்று சக்கரத்தில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட தேய்மானத்தில் புகை வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement