வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மேற்குவங்க மாநிலம் லக்கிம்பூர் கேரி கலவர வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா இடைக்கால ஜாமினை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 2021-ம் அக்டோபர் மாதம் விவசாயிகளின் பேரணியில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் கார் புகுந்ததில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனால் வெடித்த வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
![]() |
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கு தொடர்புடையவர்களை கைது செய்தனர்.
ஆஷிஸ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனை நீட்டிக்க கோரி ஆஷிஷ் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூரியகாந்த், திப்னாகர் தத்தா, ஆகியோர் அடங்கிய பெஞ்ச் , செப்டம்பர் 26 வரை இடைக்கால ஜாமினை நீட்டித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement