சென்னை: காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவியா என்று யூடியூபர் திவ்யா கள்ளச்சியை நடிகை ஷகிலா வெளுத்து வாங்கினார்.
கார்த்தி மாமா ஐ லவ் யூ என்று டிக்டாக் செயலியில் கார்த்தியை தேடி அலைந்து பிரபலமானவர் தான் திவ்யா.தன்னை கார்த்தி என்பவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்தார்.
டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து யூடியூபில் நேரலையில் வந்து பாலோவருக்காக கண்டதையும் பேசி வருகிறார்.
கல்யாண வீடியோ: இரண்டு மாதத்திற்கு முன் திவ்யா கள்ளச்சி,தேனி ஈஸ்வரனை திருமணம் செய்து கொண்டு, கணவருடன் ஆடுவது,பாடுவது,ஊர் சுற்றுவதுமாக இருந்தார். ஆனால்,தேனி ஈஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், தேனி ஈஸ்வரனை திருமணம் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் திவ்யா.

கண்டெண்ட்டுக்காக: இந்நிலையில், நடிகை ஷகிலா,திவ்யாவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த திவ்யா, இது உண்மையான திருமணம் இல்லை கண்டெண்டுக்காக நடந்த திருமணம், தேனி ஈஸ்வரன் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அதனால், என் வாழ்க்கையை பணயம் வைத்து கல்யாணம் ஆனமாதிரி இரண்டு பேரும் நடிச்சோம்.
பணத்திற்காக நடிச்சேன்: நான் எம்.எஸ்.சி படித்து இருக்கிறேன் என் மேல இரண்டு கேஸ் இருக்கு எனக்கு யாரும் வேலை தரமுன்வரல, எனக்கு பணத்தேவை இருக்கு, என் வாழ்க்கையை நடத்த பணம் வேண்டும், இந்த கல்யாண வீடியோவால் எனக்கு நிறைய பணம் வந்துச்சு பணத்திற்காகத்தான் நான் இப்படி செய்தேன் என்றதும் கடுப்பான ஷகிலா அடச்சீ அசிங்கமா இல்லையா உனக்கு காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவியா? என்றார்.

வெளுத்து வாங்கிய ஷகிலா: கல்யாணம் ஆகாத பெண்ணு காசு வருது என்பதற்காக அவன் கூட ஆடுறது, பாடுறாது, தாலி போட்டுகிட்டு சுத்துறது கொஞ்சம் கூட அசிங்கமாவே இல்லையா? நீ என்ன நடிகையா என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டு திவ்யாவை வெளுத்து வாங்கி தயவு செய்து வெளியேபோ உன்கிட்ட என்னால பேசமுடியாது என்று சொல்லி திவ்யாவை அனுப்பிவைத்தார். ஷகிலாவின் அடுத்தடுத்த கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் திணறிய திவ்யா ஒரு கட்டத்தில் அழத்தொடங்கினார்.