பொது சிவில் சட்டம்.. சனாதன சங்கிகளே கேட்குதா.. அலறவிட்ட திமுக ராஜீவ் காந்தி!

சென்னை:
இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி அதை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் ஆரம்பகால கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இருந்தபோதிலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. பாஜக தலைவர்கள் அனைவரும் இதற்கு ஏகபோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரம் கோயில் வருமானத்தை 400 பேர் மட்டும் பகிர்ந்து கொள்வதா..? சேகர் பாபு ஆவேசம்இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“சனாதன சங்கிகளே கேட்குதா.. தனி சுடுகாடு.. தனி குளம்.. தனி பாதை.. தனி கோயில்.. தனி பூசாரி.. தனி மரியாதை.. தனி தொழில்.. தனி உடை.. தனி மொழி.. தனி உணவு.. பூசைக்கு சமஸ்கிருதம் மொழி.. கல்யாணத்துக்கு சமஸ்கிருத மந்திரம்.. உயர் ஜாதி.. கீழ் ஜாதி.. என பாத்தா.. தொட்டா.. பட்டுவிடும் தீட்டு.. கெட்டுவிடும் சனாதன தர்மம் என உள்ள சடங்குகளை முதலில் ஒழியுங்கள். அப்பறம் யோசிக்கலாம் பேசலாமா என பொதுசிவில் சட்டம் பற்றி.. மதங்களுக்கு இடையேயான பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு, ஒன்றிய அரசு இந்து மத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என தனது பதிவில் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.