Jailer: ஜெயிலர் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..அதிகரிக்கப்பட்ட ரன்னிங் டைம்..ஏன் தெரியுமா ?

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. சமீபகாலமாக ரஜினியின் படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.

குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ரஜினியின் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை குறிவைத்து தான் சூப்பர்ஸ்டார் என நிரூபிக்கும் முனைப்பில் இருக்கின்றார் ரஜினி.

ஜெயிலர் ரன்னிங் டைம்

இந்நிலையில் ரஜினிக்கு எப்படி ஜெயிலர் முக்கியமான திரைப்படமோ அதே போல நெல்சனுக்கும் ஜெயிலர் மிக முக்கியமான படமாகும். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் நெல்சன் மற்றும் ரஜினி பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தை ஒரு பான் இந்திய படமாக உருவாக்க வேண்டும் என முயற்சித்த ரஜினி படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரை ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்தனர்.

Maaveeran: மனைவி கொடுத்த அன்பு பரிசு..நெகிழ்ச்சியான சிவகார்த்திகேயன்..மாவீரன் ஸ்பெஷல்..!

இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தை போட்டு பார்த்த ரஜினிக்கு படத்தின் மீது முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாம். படம் சிறப்பாக இருப்பதாகவும், தனக்கு ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளார் ரஜினி.

இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான போஸ்டர், கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான காவாலா என்ற பாடல் செம ஹிட்டடித்துள்ளது. என்னதான் இப்பாடல் ரஜினியை தவிர்த்து தமன்னாவை முன்னிலை படுத்தி வந்தாலும் ரசிகர்கள் இப்பாடலுக்கு அமோகமான வரவேற்பை தந்தனர்.

வெளியான அப்டேட்

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் ரன்டைம் பற்றியும் சென்சார் பற்றியும் தகவல்கள் வந்துள்ளன. ஜெயிலர் படத்தின் ரன் டைம் கிட்டத்தட்ட 2 மணிநேரம் 50 நிமிடங்கள் ஓடும் அளவிற்கு இருக்கின்றதாம். முதலில் ஜெயிலர் படத்தின் ரன் டைம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் தான் இருந்ததாம்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் ரஜினி இடப்பெறும் காட்சிகள் பல சிறப்பாக வந்ததால், அதனை கட் செய்ய நெல்சனுக்கு மனம் வரவில்லையாம். எனவே தான் அந்த காட்சிகளை கட் செய்யாமல் அப்படியே படத்தில் வைத்துள்ளாராம் நெல்சன். மேலும் ஜெயிலர் படத்திற்கு சென்சாரில் U /A சான்றீதழ் தான் கிடைக்குமாம். ஏனென்றால் படத்தில் அதிகமான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தான் இப்படத்திற்கு U /A சான்றீதழ் தான் கிடைக்கும் என தகவல்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.