சென்னை: நடிகர் விமல் குடிக்கு அடிமையானதால், அவரது சினிமா வாழ்க்கையே தலை கீழாக மாறிவிட்டது என்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்திருந்தவர் நடிகர் விமல். சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்த விமல், கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம் உள்பட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
நடிகர் விமல்: சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் வெளியான களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிக்கும் படி இருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா,தேசிங்கு ராஜா,ஜன்னல் ஓரம், புலிவால், உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
வாய்ப்பை நழுவவிட்டார்: எதார்த்தமான பேச்சு, நடிப்பு என பக்கா கிராமத்து மனிதராக நமக்கு அறிமுகமான விமல் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார். ஆனால் அவர் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய குடிப்பழக்கம் பழக்கத்தின் காரணமாக இன்று கிடைத்த வாய்ப்புகளையும் நழுவ விட்டார். இவரது குடிப்பழக்கம் காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்துவாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
தடம் மாறாமல் இருந்து இருந்தால்: சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு இணைய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, சண்டகரி, எங்க பட்டன் சொத்து, மஞ்சள் குடை, லக்கி ஆகியபடங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.திறமையான நடிகரான விமல் தடம் மாறாமல் இருந்து இருந்தால், நிச்சயம் சிவகார்த்திகேயன் அளவுக்கு ஒரு முன்னணி நடிகராக இருந்து இருப்பார் என்று பிரபலம் ஒருவர் பேட்டியில் பேசி உள்ளார்.