சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கோவா, சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய சூர்யா 43 படத்தில் சூர்யா இணையவுள்ளார்.
இந்தப் படத்தை சூர்யாவை வைத்து சூரரைப் போற்றுப் படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா பிறந்தநாளில் அறிவிக்கப்பட உள்ள சூர்யா43 படம்: நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் இணைந்துள்ளார். வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்டுவரும் இந்தப் படத்தின் சூட்டிங், கோவா, சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
படத்தில் சூர்யாவிற்கு திஷா பட்டானி ஜோடியாகியுள்ளார். 3டியில் உருவாகிவரும் இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டில்தான் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முன்னதாக தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் முடுக்கிவிடப்படும என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் பிரம்மாண்டமான ப்ரமோ முன்தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மட்டுமே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் ப்ரமோவை ரசிகர்களை அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் ரசிகர்களிடையே மிதகுந்த எதிர்பார்ப்பை ஒட்டுமொத்தமாக ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் கேரியர் பெஸ்ட் படமாக இந்தப் படம் அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். ஒவ்வொரு காட்சிகளையும் மிகுந்த மெனக்கெடலுடன் படக்குழுவினர் காட்சிப்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சூர்யாவின் பிறந்தநாளையொட்டி அவரது அடுத்தப்படமான சூர்யா43 படத்தின் அறிவிப்பும் அன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இரண்டாவது முறையாக சூர்யா இணையவுள்ளார்.

நடிகர் சூர்யா -சுதா கொங்கரா இருவரும் இணைந்து முன்னதாக சூரரைப் போற்று படத்தை கொடுத்திருந்தனர். ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை சூர்யாவே தயாரித்திருந்தார். கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது மீண்டும இணையவுள்ளனர். ஆனால் இந்தப் படம் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இருக்காது என்று முன்னதாகவே சுதா கொங்கரா தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தபார்ப.