Samantha: உடல்நலம் சரியாகணும்: பொற்கோவிலை அடுத்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்ற சமந்தா

உடல் நலத்தில் கவனம் செலுத்த பிரேக் எடுத்துள்ள சமந்தா கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார்.

​சமந்தா​தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு இருக்கிறது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே தொடர்ந்து படங்கள், வெப்தொடர் என பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நலனில் கவனம் செலுத்த, உயர் சிகிச்சை பெற, ஓய்வு எடுக்க நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்திருக்கிறார் சமந்தா.உதயநிதி ஸ்டாலின்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​பொற்கோவில்​நடிப்பில் இருந்து பிரேக் எடுத்த கையோடு வேலூரில் இருக்கும் பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் சமந்தா. ஆரஞ்சு நிற சுடிதாரில் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவருடன் லியோ பட தயாரிப்பாளரான ஜெகதீஷும் சென்றார். கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் சமந்தா.Dhanush: 40 வயசாகிடுச்சு, இனி லவ் எல்லாம் செட்டாகாது: தனுஷ் என்ன இப்படி சொல்லிட்டாரு!​

​பண்ணாரி அம்மன்​பொற்கோவிலை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறார் சமந்தா. வனப்பகுதியில் இருக்கும் பண்ணாரி அம்மன் கோவிலில் தன் உடல்நலம் குறித்து பிரார்த்தனை செய்திருக்கிறார். கோவிலில் சமந்தாவை பார்த்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

​தியானம்​Swathi Reddy: காதல் கணவரை பிரிந்துவிட்டாரா சுப்ரமணியபுரம் ஸ்வாதி?ஈஷா மையத்திற்கு சென்ற சமந்தா அங்கு தியானம் செய்திருக்கிறார். சத்குரு முன்பு அனைவரும் தியானம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற சுடிதார், நெற்றியில் குங்குமம், கழுத்தில் மாலையுடன் தியானம் செய்திருக்கிறார். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள தியானம் செய்யத் தவறாதவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

​பழனி முருகன்​நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பதற்கு முன்பு இயக்குநர் பிரேம்குமாருடன் சேர்ந்து பழனி முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார் சமந்தா. 600 படியேறிச் சென்று அவர் சாமி தரிசனம் செய்ததை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். உடம்புக்கு முடியாத இந்த நேரத்தில் இப்படி 600 படி ஏறணுமா சம்மு என அக்கறையுடன் கேட்டார்கள்.
​ஷூட்டிங்​ராஜ் மற்றும் டிகே இயக்கத்சில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வந்தார் சமந்தா. அந்த ஷூட்டிங் முடிந்துவிட்டது. மேலும் விஜய் தேவரகொண்டா உடனான குஷி படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். புதுப்படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை. இதையடுத்தே உடம்பை தேற்றிவிட்டு வர நினைத்து நடிப்பில் இருந்து சில மாதங்கள் பிரேக் எடுத்திருக்கிறார்.

​SJ Suryah: நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்ல எஸ்.ஜே. சூர்யா

​பயணம்​சமந்தாவுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். பயணிக்கும்போது தான் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. இந்நிலையில் தான் கிடைத்திருக்கும் பிரேக்கை பயன்படுத்தி பயணம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்வது வீண் போகாது. உங்களுக்காக நாங்களும் பிரார்த்தனை செய்து வருகிறோம் என சமந்தா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.