சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் லீக்கானதாக போலியான ஒரு லிங்க் இணையத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா என நடித்துள்ள திரைப்படம் கொலை. இப்படத்திற்கு கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது.
வித்தியாசமான கதையில் விஜய்ஆண்டனி: நான்,சமீர், சைத்தான், எமன், பிச்சைக்காரன் போன்ற வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்த திரைப்படத்தில் மூளை மாற்று அறுவை சிகிச்சை என்ற வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருந்தார். இந்த படமும் கலேக்ஷனை அள்ளியது.
கொலை படத்தின் கதை: இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த கொலை திரைப்படம் இன்று வெளியானது. மாடல் அழகியாக மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக ரித்திகா சிங் நியமிக்கப்படுகிறார். ஆனால், கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அதீத துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார்.

கலவையான விமர்சனம்: இதில் கொலை செய்யப்பட்ட மாடல் அழகியின் பார்வையில் இருந்து விசாரணையை விஜய் ஆண்டனி தொடங்குகிறார். இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனி நடுத்தர வயதுடைய நபராக பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அடுத்தடுத்த திருப்பங்களுடன் வெளியாகி உள்ள இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இணையத்தில் லீக்: இந்நிலையில், கொலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கலில் லீக்காகி விட்டதாக போலியான ஒரு லிக் இணையத்தில் லிங்க் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த செய்தி விஜய் ஆண்டனி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்த நிலையில், அந்த லிங்க் போலியான லிங்க் என்றும், இணையத்தில் வெளியாக அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.