சென்னை: கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
அந்த படத்தைத் தொடர்ந்து ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்தார்.
யாஷிகா ஆனந்த்: ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவுசரில் வலம் வந்து, க்யூட்டா தமிழ் பேசி டீன் ஏஜ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துப்போட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாக நடிகையாக மாறிய யாஷிகாவிற்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.
பயங்கர விபத்து: இதையடுத்து, கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், யாஷிகாவின் தோழியான வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா 3 மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்து தீவிர சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.

விபத்து வழக்கு: இந்த விபத்து குறித்து மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக மார்ச் மாதம் 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் பின் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
நேரில் ஆஜரானார்: ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை யாஷியா நேரில் ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான ட்ரையல் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி முதல் நடைபெறும் எனக் கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.