மகளிர் உரிமைத் தொகை நிபந்தனைகளில் தளர்வு? ஸ்டாலின் கறார் முடிவு! அடுத்த ஆண்டு ரூ.12ஆயிரம் கோடி!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாம்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மின் இணைப்பு எண், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பிரத்யேக செயலி மூலம் விண்ணப்பதாரர்களின் விவரங்களை உள்ளிடுகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் சரிபார்ப்பு!விண்ணப்பங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஒத்துப் போகும் விண்ணப்பதாரர்களை பயனாளிகளாக சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்களின் வீடுகளில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கூறினாலும், அனைத்து தரப்பினரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தாலும் தமிழக அரசின் நிபந்தனைகளின் படி பலர் பயன்பெற முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நிபந்தனைகள் தளர்த்தப்படுமா?தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் மாத சம்பளம் பெறுபவர்கள் தகுதியானவர்கள் பட்டியலில் வரமாட்டார்கள். அதாவது பிடித்தம் போக மாதம் சுமார் 18ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் இல்லை. இந்த சம்பளத்தைக் கொண்டு வீட்டு வாடகை, உணவு, கல்விச் செலவு, போக்குவரத்து செலவு ஆகியவற்றை மேற்கொள்ளும் குடும்பம் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டால் பெரிய பலனை அளிக்கும்.
கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் இல்லையா?அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடையாது என்று மொத்தமாக அறிவிக்காமல் சில ஆயிரங்கள் சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்களை பயனாளிகளாக கொண்டு வந்திருந்தால் நன்மை பயக்கும் வகையில் அமைந்திருக்கும். அதேபோல் குடும்பத்தில் , ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக அரசு குறிப்பிட்டுள்ள வரையறைக்குள் வந்தாலும் , அந்த குடும்பத்தில் ஒருவர் முதியோர் உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்தால் அந்த குடும்ப பெண்ணுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு முடிவு என்ன?தமிழக அரசு இந்த நிபந்தனைகளில் தளர்வு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதிகளவில் கோரிக்கைகள் வருவதால் அடுத்த நிதி ஆண்டில் தமிழக அரசு தளர்வு கொடுத்து மேலும் பல குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அந்த முடிவில் இல்லை என்றும் இதே நிலைதான் அடுத்த ஆண்டும் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.
12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இந்த நிதி ஆண்டில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான 7 மாதங்களுக்கு மாதம் தலா ஆயிரம் கோடி என்ற அளவில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஒரு பெண்களுக்கு மாதம் ஆயிரம் என்ற கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த திட்டத்திற்கு 12,000 கோடி நிதி ஒதுக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் திட்டவட்டம்!​​
ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையான காலகட்டத்துக்கு அதாவது 12 மாதங்களுக்கு 12ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் அடுத்த நிதி ஆண்டும் இதே ஒரு கோடி பேருக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் திட்ட விரிவாக்கத்துக்கு வாய்ப்பில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.