
ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞரை சந்தித்த கமல்
கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். இரண்டு காரணங்களுக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். முதல் காரணம் கமல் முதன் முறையாக இன்னொரு ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கும் 'கல்கி 2898ஏடி' படத்தின் அறிவிப்பு. இந்த நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இதில் கமல் கலந்து கொண்டார். இன்னொரு காரணம் இந்தியன் 2 படத்திற்கான தொழில்நுட்ப உதவியுடனான காட்சிகள் அங்கு படமாகிறது.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனை கலைஞர் மைக் வெஸ்ட்மோரை கமல் சந்தித்தார். இருவரும் 40 ஆண்டுகால நண்பர்கள். 'அவ்வை சண்முகி'யில் பெண் வேடம், தசாவதாரத்தில் 9 வேடங்களை வடிவமைத்தவர் வெஸ்ட்மோர். தற்போது ‛இந்தியன் 2' படத்திலும் இந்தியன் தாத்தா வேடத்திற்கு அவர்தான் ஒப்பனை செய்கிறார். இருவரும் இணைந்து அடுத்த சில வாரங்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.