Dhanush: தனுஷ் பர்த்டே ட்ரீட்.. பட்டையை கிளப்பும் அப்டேட்கள்: பரபரக்கும் சோஷியல் மீடியா.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நாளைய தினம் 40 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஆரம்ப காலத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா? என்ற விமர்சனத்தை சந்தித்து, இன்று இவரை போல் நடிக்க யாருமே இல்லை என சொல்லும் அளவிற்கு ஒரு உச்ச நட்சத்திரமாக தன்னை தானே செதுக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் இவரின் பர்த்டே ட்ரீட்டாக தனுஷ் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி சோஷியல் மீடியாவினை கலக்கி வருகிறது.

கோலிவுட் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை தடம் பதித்துள்ளார் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகி இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப்படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி என மாஸான லுக்கில் கடந்த சில மாதங்களாக வலம் வந்தார் தனுஷ்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் சினிமாவில் ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ராவான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகியுள்ளது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் தனுஷ் இலங்கையை சார்ந்த போராளியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Jailer: ‘ஜெயிலர்’ படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.?: மாஸ் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.!

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இன்றிரவு 12.01 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனிடையில் தனுஷின் 51 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் D51 படம் உருவாக இருப்பதாக புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Indian 2: ‘இந்தியன் 2’ படத்திற்காக கமல் செய்துள்ள காரியம்: வியந்து போன கோலிவுட் வட்டாரம்.!

நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் ஒரு புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் தனது 50 வது படத்தினை தனுஷே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்காக மொட்டை எல்லாம் போட்டுள்ளார் தனுஷ். மேலும் இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

D50 படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் குறித்த புதிய அறிவிப்பும் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் தனுஷ் படங்களின் பல அப்டேட்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுவதால் அவரின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.