
சின்ன படத்திற்கு குரல் கொடுத்த தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். நடிகரை தாண்டி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர். தனது படங்களில் தனுஷ் பாடல் பாடுவதை தாண்டி வெளி படங்களில் தேர்ந்தெடுத்து தான் பாடல்களை பாடுவார்.
இந்த நிலையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்திற்கு ஏ.எச்.காசிப் இசையில் தனுஷ் சில நாட்களுக்கு முன்பு ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதியின் உதவி இயக்குனர் மற்றும் நடிகர் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சில ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் இந்த வருடத்தில் வெளியாக உள்ளது.