கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் (Kempegowda International Airport) அமைந்துள்ளது. பயணிகள் வருகை, விமானங்கள் இயக்கம், சரக்கு விமானங்களை கையாளுதல் ஆகியவற்றை கருத்தில் எடுத்து கொண்டால் இந்தியாவின் 3வது பிஸியான விமான நிலையம் என்பது கவனிக்கத்தக்கது. இது சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
டெர்மினல் 2 பகுதிசரியாக சொல்ல வேண்டுமெனில் பெங்களூருவில் இருந்து 30 கிலோமீட்டர் வடக்கே நகருக்கு வெளியே தேவனஹள்ளி அருகில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள டெர்மினல் 1 பகுதியில் இருந்து தான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி டெர்மினல் 2 திறக்கப்பட்டு சர்வதேச விமான போக்குவரத்து மட்டும் அங்கு மாற்றப்பட்டது.சர்வதேச விமானப் போக்குவரத்துதற்போது 2 இந்திய விமானங்கள் உட்பட 28 சர்வதேச விமானங்கள் பெங்களூருவிற்கு வந்து செல்கின்றன. இவை அனைத்தும் தற்போது டெர்மினல் 2ல் பகுதிக்கு மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் டெர்மினல் 2 பகுதியில் புதிதாக பயணிகள் பார்வையிடும் கேலரிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரட்டை கோபுர கட்டமைப்புஅதாவது 131 அடி உயரத்திற்கு இரட்டை கோபுரங்கள் அமைத்து, அதன் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு உணவு சாப்பிடலாம். பானங்கள் அருந்தலாம். விமானம் வானில் பறப்பதை, கீழே இறங்குவதை பார்த்து ரசிக்கலாம். அதுமட்டுமின்றி கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தை 360 டிகிரி கோணத்தில் காண முடியும். இதற்கேற்ப உணவகங்கள், பார்கள், ஓய்வறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
கார்டன் பெவிலியன்ஸ்இந்த ட்வின் டவருக்கு, அதாவது இரட்டை கோபுரங்களுக்கு கார்டன் பெவிலியன்ஸ் (Garden Pavilions) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது வனப் பகுதிகளை உள்ளடக்கிய தீமில் கட்டமைக்க உள்ளனர். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட்கார்டன் பெவிலியன்ஸ் என்று சொல்லப்படும் இரட்டை கோபுரங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் இந்தியாவில் மிக உயரமான பயணிகள் பார்வையிடும் கேலரி டவர் என்ற பெருமையை பெங்களூரு விமான நிலையம் பெற்றுவிடும். இது டெர்மினல் 2ல் இடம்பெறவுள்ளதால் சர்வதேச விமானப் பயணிகள் மட்டுமே பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.இமிகிரேஷன் டூ ட்வின் டவர்முதலில் விமான நிலையத்திற்கு உள்ளே வரும் பயணிகளின் இம்மிகிரேஷன் சரிபார்ப்பு பணிகள் அனைத்தியும் முடித்துவிட வேண்டும். இதையடுத்து டவருக்கு சென்று பொழுதை கழித்து மகிழலாம். தற்போது டெர்மினல் 2 பகுதியில் இரட்டை கோபுரங்களுக்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும் என்று விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.