நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் ஆகியோரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர விருக்கிறது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘ஜெயிலர்’ திரைப்படதின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் சகோதரர் பங்கேற்றுள்ளனர். மேலும், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி, அனிருத், விக்னேஷ் சிவன், அருண் ராஜா காமராஜ், சூப்பர் சுப்பு ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் பேசிய அனிருத்,” நெல்சன் எனக்கு ரொம்ப நாள் பழக்கம்.முதல் படம் ஷூட் பண்ணி தள்ளிப் போயிருச்சு.அப்புறம் பழைய வேலைக்கே போனாரு.கோலமாவு கோகிலா-ல ஹிட் கொடுத்தாரு.இப்போ,4 வது படமே தலைவர் படம்.நெல்சன், இந்த முறை குறி தப்பாது .ஆகஸ்ட் 10 ஆம் தேதி அலப்பர கெளப்புறோம்.நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் எனக்கு 2 வயசு இருக்கும் போது ‘அண்ணாமலை’ படம் பார்த்தேன்.அப்போ எனக்கு ஏற்பட்ட அதே அனுபவத்த இப்பவும் அனுபவிக்குறேன்.நெல்சனுக்குள்ளையும் ஒரு எமோஷனல் பக்கமிருக்கு.அதை பெருசா வெளியபடுத்திக்க மாட்டாரு.” என்றார்