ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஜோடி தோல்வி…!

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் தைவானின் வாங் சி லின் – லீ யாங் இணையை இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி எதிர் கொண்டது.

இந்த ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்வியின் மூலம் சாத்விக் – சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சாத்விக் – சிராக் ஜோடி இந்தோனேசிய ஓபன், கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.