முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்.. திருமணம் செய்து கொள்ளாத நக்மாவின் மறுபக்கம்!

சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நக்மா.

மும்பை மாடல் அழகிகளின் வரவு தமிழ் சினிமாவில் அதிகரித்து இருந்த காலகட்டத்தில் பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி ஆனவர் தான் நக்மா.

இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

நடிகை நக்மா: இந்திரையோ இவள் சுந்தரியோ…தெய்வ ரம்பையோ மோகினியோ என்ற பாடல் ஒலிக்க, கால் கொலுசு கொஞ்சலுடன் காதலன் படத்தில் தேவதைபோல் வந்து நின்ற நக்மாவை 90ஸ் இளசுகளால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். நக்மா தமிழில் அறிமுகமான முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

அடுத்தடுத்த ஹிட் படம்: முதல் படத்தின் வெற்றியால் புகழின் உச்சிக்கு சென்ற நக்மா தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்து டாப் நடிகை ஆகார். அதன்பிறகு கார்த்திக், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

popular Bollywood actress and Politician Nagma life history

சிட்டிசன் படத்தில்: தமிழில் 12 படங்களில் நடித்த நக்மா அஜித் நடித்த தீனா மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருந்தார். சிட்டிசன் திரைப்படம் தான் நக்மா தமிழில் நடித்த கடைசி படமாகும். அந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நக்மா தமிழில் படங்களில் நடித்தாலும் போஜ்புரி மொழியில் இவர் அதிக படங்கள் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை போஜ்புரி மொழியில் தான் பெற்றுள்ளார்.

அரசியலில் நுழைந்தார்: படங்களில் நடித்துக்கொண்டிருந்த நக்மா,பாஜகவில் இணைவார் என்றும் ஹைதராபாத் தொகுதியில் 2004 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நக்மா தான் வேட்பாளர் என்றும் சொல்லப்பட்ட நிலையில், அதை தவிடு பொடியாக்கிய நக்மா அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின் 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மீரட் எம்பி தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டையும் இழந்தார். தற்போது நக்மா அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

popular Bollywood actress and Politician Nagma life history

காதல் கிசுகிசு: நடிகை நக்மா 2001ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியுடன் உறவில் இருந்ததாகவும், இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும் அப்போது பாலிவுட் பத்திரிக்கையில் கிசுகிசுக்கள் வந்தன. பரபரப்பாக பேசப்பட்ட அந்த கிசுகிசு குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. நடிகை ஜோதிகாவின் சகோதரியான நக்மா தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமலே இருந்து வருகிறார். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் திருமணம் செய்யவில்லை என அவர் பல பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.