Rajaji Nagar Sridevi Karumariamman Temple 33rd Annual Karaka Festival Begins Tomorrow | ராஜாஜி நகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் 33வது ஆண்டு கரக திருவிழா நாளை துவக்கம்

ராஜாஜி நகர் : ராஜாஜிநகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலின் 33 வது ஆண்டு, கரக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பெங்களூரு ராஜாஜிநகர் 6 வது பிளாக்கில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 33வது ஆண்டு கரக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை 6:30 மணிக்கு அம்மனுக்கு ருத்ராபிஷேகம்; காலை 9:00 மணிக்கு கொடியேற்றம்; இரவு 7:00 மணிக்கு கங்கா பூஜை நடக்கிறது.

ஆகஸ்ட் 1 ம் தேதி காலையில் 108 கலச அபிஷேகம்; காலையில் துர்கா ஹோமம், மதியம் கூழ் ஊற்றுதல்; மாலையில் துர்கா ஹோமம்;

இரண்டாம் தேதி காலையில் கனகாபிஷேகம்; காலையில் நகர தேவதை அன்னியம்மா தேவியை அழைத்து பதியமர்த்தல்; மதியம் அன்னதானம்; மாலையில் சண்டி ஹோமம், இரவு தீபாராதனை;

மூன்றாம் தேதி காலையில் இளநீர் அபிஷேகம்; காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, சக்தி கரக ஊர்வலம்; நான்காம் தேதி காலை 5:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை, பக்தர்கள் தங்கள் கையால், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். இரவு 8:00 மணிக்கு தீ மிதி திருவிழா.

ஐந்தாம் தேதி காலையில் மஞ்சள் நீராட்டு விழா; மாலையில் கும்ப பூஜை; இரவில் அம்மன் தேர் ஊர்வலம் நடக்கிறது.

கரக திருவிழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.