101வது தேசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

சுகததாச தேசிய விளையாட்டரங்கில் ஜூலை 28- 30 ம் திகதி வரை தேசிய தடகள கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 101வது தேசிய தடகள சம்பியன்ஷிப் – 2023 போட்டியில் இலங்கை இராணுவ வீர வீராங்கனைகள், 16 தங்கப் பதக்கங்கள், 23 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

இராணுவத்திற்கான தடகள விளையாட்டு போட்டியில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ, 10,000 மீ, 110 மீ தடை தாண்டல், 400 மீ தடை தாண்டல் , உயரம் பாய்தல், நீளம் பாய்தல், முப்பாச்சல், ஈட்டி எறிதல், பட் எறிதல் மற்றும் தம்மட்டி வீசுதல் ஆகிய போட்டிகளில் இராணுவ வீரர்கள் வெற்றி பெற்றனர்.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல் மற்றும் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவ தடகள குழுவின் தலைவரும் கொமாண்டோ பிரிகேட் தளபதியுமான வீஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் இராணுவ தடகள குழுவின் உப தலைவரும் 6 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியுமான லெப்டினன் கேணல் ஜீஆர்ஆர்கேஎஸ் ஜயரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, மற்றும் இராணுவ தடகள கழகத்தின் செயலாளர், இராணுவ விளையாட்டு வீரர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கடந்த ஐந்து தசாப்தங்களில் தடகளத் துறையில் ஈடு இணையற்ற சாதனையை நாட்டிலேயே மிகவும் முன்னணி ஒற்றை அமைப்பாக இலங்கை இராணுவம் கொண்டுள்ளது. 1950 ஆம் ஆண்டில் இராணுவத்தின் தடகளக் குழு நிறுவப்பட்டதிலிருந்து ஒரு சில ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களின் ஒரு பெரிய குழுவை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.