திருச்சி மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குத் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர், […]
