ரஜினி பெரியவர்..விஜய்யும் பெரிய ஆள்..எனவே..ஓபனாக பேசிய மிஸ்கின்..!

தமிழ் சினிமாவில் தற்போது யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பஞ்சாயத்து தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்கவைத்து வருகின்றார். எனவே அன்றும் இன்றும் என்றும் ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என ஒருபக்கம் அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

மறுபக்கம் ரஜினிக்கு வயதாகிவிட்டது, எனவே தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என அவரது ரசிகர்கள் கூற இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளது. இந்த மோதல் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. மேலும் இதைப்பற்றி பல திரைபிரபலங்கள் தங்களை கருத்துக்களை கூறி வந்தாலும் இந்த மோதல் நின்றபாடில்லை.

ரஜினியின் குட்டி கதை

மேலும் இந்த மோதலை அதிகரிக்கும் வகையில் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் பாடல் அமைந்துவிட்டது. அந்த பாடலில் இடம்பெற்ற வருகையில் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பற்றி மறைமுகமாக பேசப்பட்டதாக கூறி விஜய் ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது.

Jailer: ரஜினி சூப்பர்ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்..வெளிப்படையாக பேசிய பிரபலம்..!

இந்நிலையில் கடந்த வாரம் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரஜினி, காக்க – கழுகு என்ற குட்டி கதையை கூறினார். கழுகு உயர பறக்கும், அதனை கொத்த காகங்கள் முயற்சிக்கும். ஆனால் அது முடியாமல் காகம் கீழே விழுந்துவிடும். கழுகு உயர்ந்து பறந்துகொண்டே தான் இருக்கும் என கூறினார்.

ரஜினி இந்த கதையை கூறியதை அடுத்து இணையத்தில் ஒரு சிலர் இவர் விஜய்யை தான் குறிப்பிட்டு பேசுகின்றார் என கிளப்பிவிட்டு இது மேலும் மோதலை அதிகப்படுத்தியது. இதில் இருந்து இணையதளம் தற்போது போர்க்களமாக காட்சியளித்து வருகின்றது. அந்த அளவிற்கு விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிஸ்கின் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான மிஸ்கின் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ரஜினி ஒரு பெரிய மனிதர். அவர் யாரையும் புண்படுத்தமாட்டார். அவர் கூறியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். ரஜினி போன்ற ஒரு பெரியவர் சொன்னதை சில குழந்தைகள் சீரியஸாக எடுத்துக்கொண்டு சண்டையிடுவது சரியல்ல.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

திரையுலகில் ரஜினி பெரிய மனிதர் என்றால் விஜய்யும் பெரிய ஆள் தான். எனவே ஜெயிலர் படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும், லியோ படத்திற்கும் ஆதரவு தரவேண்டும் என கூறினார் மிஸ்கின் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.