தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலைத் துறையின் அனைத்து அலகுகளின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றும் (ஆகஸ்ட் 3), நாளையும் (ஆகஸ்ட் 4) என இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. இதில் 2ஆம் நாள் ஆய்வுக் கூட்டத்தில் சென்னை டூ கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டம்இந்த திட்டம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. சென்னை டூ கன்னியாகுமரி தொழில்தடத் திட்டமானது கிழக்கு கடலோர பொருளாதார வழித்தடத்தின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படுகிறது. இது மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்துவது, மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.தொழில்துறை வளர்ச்சிமேலும் மதிப்பு கூட்டப்பட்ட துறைகளின் பங்களிப்பை மேம்படுத்த முடியும். ஜவுளி, ஆட்டோமொபைல், இயந்திரங்கள், பெட்ரோ ரசாயனம், உலோகங்கள், கனிமங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 1,000 கிலோமீட்டர் தூர கடலோர பகுதி மற்றும் துறைமுகங்களை இணைக்கவுள்ளனர். மொத்தம் 20 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை செல்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவிஇதனுடன் சென்னை டூ கன்னியாகுமரி முதன்மை ரயில் வழிப்பாதை, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய பெரிய துறைமுகங்கள், காட்டுப்பள்ளி, காரைக்கால் ஆகிய துறைமுகங்கள், சென்னை, திருச்சி, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள், தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் ஆகியவை இணைக்கப்படவுள்ளன. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி உடன் 6,448.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தியாவின் பங்குஇதன் பின்னணியில் சுவாரஸியமான ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது, இந்தியாவின் கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்துவதன் மூலம் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியாவின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக மாறும். இதை கருத்தில் கொண்டே ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசுடன் கைகோர்த்து பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு பணிகள்589 கிலோமீட்டர் நீளம் கொண்ட 16 மாநில நெடுஞ்சாலைகள், ஆயிரக்கணக்கான கிலோமீட்டரில் சிறிய சாலைகள் மேம்படுத்தப்படும். இவற்றில் 2 ஆண்டுகள் கட்டுமானப் பணிகளும், அடுத்த 7 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட 16 நெடுஞ்சாலைகளில் 12ல் ஒப்பந்ததாரர்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை டூ கன்னியாகுமரி தொழில்வழித் தடம்3 சாலைகளுக்கு ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகியுள்ளது. எஞ்சிய ஒரு சாலையில் டெண்டர் கோரப்படவுள்ளது. ”தமிழ்நாடு விஷன் 2023” என்ற பெயரில் 6 தொழில்வழித் தடங்களை கட்டமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் மதுரை டூ தூத்துக்குடி, சென்னை டூ திருச்சி ஆகிய இரண்டும் சென்னை டூ கன்னியாகுமரி தொழில்வழித் தடத்தில் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.