நியூயார்க், அமெரிக்காவில், சமூக வலைதள பிரபல மான காய் செனாட் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இலவசம் வாங்க ஏராளமானோர் குவிந்ததால், வன்முறை வெடித்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் காய் செனாட், 21; இன்ஸ்டாகிராம், யு டியூப், ட்விட்ச் போன்ற சமூக வலைதளங்களில், லட்சக் கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.
இவர், ‘கேம் ஷோ’ போன்ற, இளைஞர்களை கவரும் விதமான வீடியோ வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில், காய் செனாட் நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அப்போது, ‘பிளே ஸ்டேஷன் – 5’ சாதனத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மன்ஹாட்டன் பகுதியில் கூடினர்.
அப்போது, கூட்டத்தில் கூடியிருந்தவர்களிடையே மோதல் வெடித்து, பின் வன்முறையாக மாறியது. அப்பகுதியில் இருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, காய் செனாட்டை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement