
‛அங்காடி தெரு' நடிகை சிந்து காலமானார்
சென்னை: அங்காடித் தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து காலமானார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் அவரது ஒரு மார்பகம் மட்டும் அகற்றப்பட்ட நிலையில், இறுதியாக இரண்டு மார்பகங்களும் நீக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதிகாலை 2: 15 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். சிந்து உடல், வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.