’பாரத்’ என்ற பெயரில் பாஜக அரசின் 3 புதிய சட்டங்கள்… மொழி ஏகாதிப்பத்தியம்… பளார் விட்ட மு.க.ஸ்டாலின்!

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு புதிதாக மூன்று சட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதாவது, நமது நாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்படும் முறை, விசாரணை நடைமுறை உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் கொண்டு வரும் வகையில் மூன்று சட்டத்திருத்தங்கள் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை நிம்மதியாக மூச்சு விடுகிறது உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

மூன்று சட்டத்திருத்தங்கள்

IPC எனப்படும் இந்திய தண்டனை சட்டம் – பாரதிய நியாய சங்ஹீதCriminal Procedure Code எனப்படும் இந்திய குற்றவியல் சட்டம் – பாரதிய சக்‌ஷியாஇந்திய ஆதார சட்டம் – பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா

மழைக்கால கூட்டத்தொடர்

இவ்வாறு பெயர் மாற்றப்பட செய்யவுள்ளனர். அடுத்தகட்டமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேண்டும். ஆனால் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்த கூட்டத்தொடரில் தான் உரிய விவாதத்திற்கு பின்னர் மசோதாக்களை நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெறும் எனத் தெரிகிறது.

கண்டனம்

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சட்டங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், புதிதாக கொண்டு வரப்படும் சட்டத்தில் ’இந்தியா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை ’பாரதிய’ என மாற்றும் மசோதாவிற்கு கடும் கண்டனங்கள்.

இந்தி மொழி ஆதிக்கம்

இவ்வாறு ’பாரதிய’ என இந்தியில் மாற்றுவது மத்திய பாஜக அரசின் மொழி சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் வகையில் மூன்று புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பன்முகத்தன்மையின் அடிப்படையை சிதைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.

தமிழ் பற்றி பேச உரிமை இல்லை

தமிழ் குறித்து இனி ஒரு வார்த்தை பேச பிரதமர் மற்றும் பாஜகவிற்கு தார்மீக உரிமை இல்லை. வரலாற்றில் எத்தனையோ அடக்குமுறைகளால் புடம் போடப்பட்டு, அடக்குமுறைகளை எதிர்ப்பதில் முன்கள வீரர்களாக தமிழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் திகழ்கின்றன. இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், எங்கள் மொழி அடையாளத்தைக் காப்பது என்ற நோக்கில் இந்தித் திணிப்பின் கொடும் புயலை எதிர்கொண்டவர்கள் நாங்கள்.

பாஜக அட்டாக்

மீண்டும் அசைக்க முடியாத நாங்கள் உறுதியுடன் அதனை எதிர்கொள்வோம். இந்தி காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தீ மீண்டும் ஒருமுறை பரவுகிறது. எங்கள் அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியோடு எதிர்க்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.